அட 1 மில்லியன் அடிச்சாச்சா! : மக்களிடம் பாசத்தை அழகாக வெளிப்படுத்திய மைனா நந்தினி – ஏன் தெரியுமா?

முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, பிறகு சின்னத்திரையில் சூப்பர் ஹிட்டாக வலம்வரும் நடிகர் நடிகைகளின் பட்டியலில் மைனா நந்தினிக்கு சிறந்த இடம் உண்டு. வம்சம் திரைப்படத்தில் அறிமுகமான மைனா நந்தினி அதன் பிறகு பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார்.
பல படங்களில் தொடர்ச்சியாக நடித்துவரும்போதும் சின்னத்திரையிலும் தனது தடத்தை தொடர்ச்சியாக பதித்து வருகின்றார் மைனா. மேலும் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிசியாக இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக ஊடகங்களிலும் அவ்வப்போது தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் 7.5 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட மைனவின் youtube சேனலை தற்போது 1 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். தற்போது அந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் பசியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவு அளித்து தனது சந்தோஷத்தை பார்கிந்துள்ளார் மைனா.
அவர் நேற்று வெளியிட்ட தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார்.