குளுகுளுன்னு ஒரு போட்டோ : கிறங்கிப்போன ரசிகர்கள் – போட்டோ எடுத்த செலிபிரிட்டி யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் திறமையும், அழகும் ஒன்றாக அமைந்த நடிகைகளின் பட்டியல் பெரியது, அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பட்டம் போலே” என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோஹனன்.
மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த பிறகு கடந்த 2019ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்டை” திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு 2021ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தோன்றி நடித்தார்.
தனுஷுக்கு மாறன் படத்தில் ஜோடியாக நடித்த இவர் இந்த 2023ம் ஆண்டு மலையாள படமான கிறிஸ்டி படத்தில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நீல நிற ஆடையில் குளுகுளுவென்று போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர். அந்த புகைப்படத்தை எடுத்து வேறுயாரும் அல்ல, நம்ம சீயான் விக்ரம் அவர்கள் தான்.
