விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம் – சிபிஐ அறிவிப்பு

இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவி்ட்டதால் அவர் எந்நேரமும் மும்பை அழைத்துவரப்பட்டு, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்படுவார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தனர். கைதுசெய்த சில மணிநேரத்தில் ஜாமீன் பெற்றார். ஜாமீனில் வெளியே இருக்கும் மல்லையா நீதிமன்றத்தில் தன்னை நாடு கடத்துவற்கு எதிரான வழக்கைச் சந்தி்த்து வந்தார்.

மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தத் தடையில்லை எனக் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.
இது குறித்து அமலாக்கப்பிரிவின் மூத்த உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில் “ மல்லையாவை இந்தியா அழைத்துவரும் அனைத்து சட்டப்பணிகளும் முடிந்துவிட்டன. வரும் நாட்களில் அவர் எந்த நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்” எனத் தெரிவித்தார்.