மாசிக்காய் எப்படி இருக்கும்? அதன் மருத்துவ குணங்கள் என்ன?

மாசிக்காய் மரத்தின் பிசினிலிருந்து வரும் ஒரு மூலிகை தான் மாசிக்காய். அதாவது மரத்திலிருந்து வடியும் பால் உறைந்து கெட்டிப்படும். இதைத்தான் மாசிக்காய் என்று சொல்கிறோம்.

மாசிக்காய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட சிறந்த மூலிகை. இதில் அற்புதமான பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை இதில் பார்ப்போம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மாசிக்காய் பயன்படுகிறது. மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும். மேலும் கருப்பையில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி கருப்பை பலம் பெறும்.

உடலில் புண் அல்லது கட்டி இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் மாசிக்காயை வாங்கி அரைத்து புண் அல்லது கட்டி மீது தொடர்ந்து போட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கட்டிகள் கரையும். புண் ரணம் ஆறும்.

பல் கூச்சம்,ஈறுகளில் வலி, பற்களில் ரத்தகசிவு போன்ற பிரச்சனைகள் இருந்தால் மாசிக்காயை வாயில் போட்டு மென்று அதன் சாறை முழுங்க வேண்டும்.

கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மாசிக்காயை சேர்த்து லேசாக ஆறவைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் வாய்ப்புண் குணமாகும்.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மாசிக்காயை உரைத்து தேனில் குழைத்து சிட்டிகை அளவு குழந்தையின் நாக்கில் தடவினால் வயிர்றுப்போக்கு கட்டுப்படும்.

சிலர் மலம் கழிக்கும் போது மலத்துடன் சேர்ந்து சில சொட்டு ரத்தமும் வெளியேறும். அதன் பிறகு கடுமையான வலி ஏற்படும். இந்த பிரச்சனை குணமாக மாசிக்காயை நீர்விட்டு குழைத்து ஆசனவாய் பகுதியில் வெடிப்பு இருக்கும் பகுதியில் தடவி வந்தால் வெடிப்பு புண் ஆறும்.

வெள்ளைப்போக்கு அதிகமாக இருப்பவர்கள் மாசிக்காய் பொடியை பாலில் அல்லது மோரில் கலந்து குடித்துவரலாம்.

கால் விரல்கள் நடுவே ஏற்படும் சேற்றுப்புண்ணை கிருமிகளோடு அழிக்க இரவு தூங்கும் முன்பு மாசிக்காயை நீரில் குழைத்து புண் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சேற்றுப்புண் இருந்த இடம் தெரியாமல் மறந்துவிடும்.

குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டு, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் சரியாக மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

Recent Post