தியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

தியானம் என்றால் அமைதி என்று பொருள். தியானம் என்பது மனதுடன் தொடர்புடைய ஒரு விஷயமாகும். மனதில் ஓடும் பல சிந்தனைகளை மாற்றி ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதனால் உடலளவிலும் மனதளவிலும் அமைதி ஏற்படுகிறது.
தியானம் செய்யும் போது அந்த இடம் அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தியானம் முழுமையடையும்.
ஆழ்ந்த தியானத்திற்குப்பின் தெளிவு பெற்றதாகக் கூறுவதற்குக் காரணம் மன அழுத்தத்திற்குத் தொடர்புடைய சைட்டோகின் எனும் மூலக்கூறுகளின் செயல்பாடுகளைச் செயலிழக்கச் செய்வதே. இதை தேசிய சுகாதார நிறுவனம் 2017 ஆண்டு வெளியிட்ட ஆய்வும் உறுதி செய்கிறது.

யோகா , தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கமின்மை, கோபம், தனிமை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடுகிறது. தியானம் செய்வதால் படிப்பு,வேலை என்று எந்த நிலையிலும் நம் கவனம் சிதறாது.
உடல் வலி, தலைவலி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்குகிறது. தினமும் தியானம் செய்வதால் மனப் பதட்டம், பயம், மனச் சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். அதேபோல் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் வராது.
ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது. தினமும் தியானம் செய்வதால் மூளை சுறுசுறுப்பாகும். மூளையில் ஆரோக்கியமும் மேம்படும். தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தலே போதும். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.