மாதவிடாய் நிறுத்தம் என்பது என்ன?
பெண்கள் வாழ்நாளில் இயற்கையாக ஏற்படும் முக்கிய மாற்றங்களில் ஒன்று தான் மெனோபாஸ் (Menopause). இது, மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும் ஒரு நிலையாகும். இது பொதுவாக 47.5 வயதிலிருந்து தொடங்கும். ஆனால், இனம், மரபியல், வாழ்க்கை முறை காரணிகள் போன்றவற்றினால் வயதிலும், தாக்கத்திலும் மாற்றம் ஏற்படலாம்.
முன்னேற்படும் மெனோபாஸ் – ஏன் இது கவலைக்குரியது?
அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் பராமரிப்பின் குறைவு, மரபணு தாக்கங்கள் போன்றவை 40 வயதிற்கும் குறைவாக மெனோபாஸ் ஏற்பட வழிவகுக்கின்றன. இதனை “early menopause” அல்லது முன்னேற்படும் மெனோபாஸ் என அழைக்கப்படுகிறது.
இது ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகள்:
- 13% அதிக சாத்தியமான டைப் 2 சர்க்கரை நோய்
- 2 மடங்கு அதிகமான இதய நோய் அபாயம்
- கருப்பை ஹார்மோன்களின் குறைபாடு
- மனஅழுத்தம், மெமரி குறைபாடு, எலும்பு நசிவு அபாயம்
இதய நோயுடன் தொடர்பு என்ன?
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, 50 வயதுக்கு முன் மெனோபாஸ் வந்த பெண்களுக்கு, இதய நோய், ஸ்ட்ரோக், நெஞ்சு வலி போன்றவைகளுக்கு 2 மடங்கு அதிக அபாயம் உள்ளது.
அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன்-இன் ஆய்வுப்படி, 55 வயதிற்கு மேலாக மெனோபாஸ் ஏற்படும் பெண்களில் 44% பேருக்கு இதய ஆரோக்கியம் சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
அதிகப்படியான வெள்ளைப்படுதல் – கவனிக்க வேண்டிய எச்சரிக்கை
வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி கூறும் படி, வெள்ளைப்படுதல் அதிகமாகும் முன்-மெனோபாஸ் நிலையிலுள்ள பெண்களில், 70% பேர் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக் அபாயத்தில் இருக்கிறார்கள். இதுவே நீண்டகாலத்தில் எலும்பு குறைபாடும், மூளை சார்ந்த பிரச்சனைகளும் உருவாகச் செய்யும்.
முன்னேற்படும் மெனோபாஸ் ஏற்படும் காரணங்கள்
- மரபணுக்கள்
- கருப்பை நீக்கம்
- ஆட்டோ இம்யூன் நோய்கள்
- கிமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகள்
- புகைபிடிப்பு
- சத்துசீனமான உணவு மற்றும் உடற்பயிற்சி பற்றாக்குறை
மெனோபாஸ் காலத்தில் என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?
நலம் தரும் உணவுகள்:
- புரதம் நிறைந்த உணவுகள் (முட்டையின் வெள்ளைக் கரு, பருப்பு வகைகள், கிட்னி பீன்ஸ்)
- ஈஸ்ட்ரோஜன் செறிவுடைய உணவுகள்
- தண்ணீர் பருகுதல்
- தினசரி இயற்கை உடற்பயிற்சி
இந்த வழிமுறைகள் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மனரீதியான மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளை குறைக்கும்.
நிபுணர் ஆலோசனை அவசியம்!
இக்கட்டுரை ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் பொதுத் தகவல்களாக மட்டுமே இருக்கின்றன. உடல்நலம் சார்ந்த எந்தவொரு பிரச்சனையும் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.