நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மூலிகைகள்

இப்பொழுது நாடு முழுவதும் பரவலாக கொரொனா வைரஸ் இருக்கிறது. ஆனால், எந்தவித தடுப்பு மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்னரே பலர் அதிலிருந்து வெற்றி கண்டு வீடு திரும்பியுள்ளனர். காரணம், அவர்கள் உடம்பில் இருந்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியே.

நம் உடலில் எந்த நோய் அல்லது எந்த வைரஸ் வந்தாலும் முதலில் எதிர்த்துப் போராடுவது நோய் எதிர்ப்பு சக்தியே. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நாம் உண்ணும் உணவுகள் மூலம் உடலுக்கு அளிக்கலாம்.

அவ்வாறு, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் சில மூலிகைகள் பற்றி பார்க்கலாம்.

5 கிராம் வேப்பிலை.

நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான மூலிகைதான் வேப்பிலை. 5 கிராம் வேப்பிலை எடுத்து அதனை நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த வேப்பிலை சாற்றினை வெறும் வயிற்றில் அருந்தவும். அருந்திய பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்தவித உணவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்பொழுதுதான் வேப்பிலையின் முழு பலன் நமது உடலுக்கு கிடைக்கும்.

பயன்கள்: வேப்பிலை நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. இது அனைத்துவித பாக்டீரியாக்கள், வைரஸ்கள், உடல் சீர்கேட்டை கெடுக்க வரும் அனைத்துவித தொற்றுக்களையும் எதிர்த்துப் போராடும். இதனால் உடல் எந்தவித நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

வேப்பிலை சாற்றை தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்கள் தவிர்க்க வேண்டும்.

Healthy food clean eating selection: fish, fruit, vegetable, seeds, superfood, cereals, leaf vegetable on gray concrete background copy space

5 கிராம் கீழாநெல்லி கீரை

நமது இயற்கை அன்னை நமது உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க விலைமதிப்பற்ற மூலிகைகளே அதிகம் தருகிறது. அவ்வாறு சிறுநீரகத்தை பாதுகாக்கும் கீழாநெல்லி 5 கிராம் எடுத்து அதனை நன்கு அரைத்து வடிகட்டி சாறெடுத்து கொள்ளவும். இந்த சாற்றினை வெறும் வயிற்றில் அருந்தவும்.

பயன்கள்: இது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கும். சிறுநீரக கல் ஏற்படாமல் பாதுகாக்கும். கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட இது உதவும். இதனால் உடலில் இயக்கம் சீராக இயங்கி தேவையற்று இருக்கும் கிருமிகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்து இருக்கும்.

அரை இன்ச் இஞ்சி

இஞ்சியின் மருத்துவ குணங்கள் உடலை பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. தினமும் காலை உணவிற்கு முன் அரை இன்ச் அளவிற்கு இஞ்சியை எடுத்து அதன் தோளினை நன்றாக உரித்து பின்னர் இஞ்சியை வாயில் போட்டு மெதுவாக மென்று அந்த சாற்றினை விழுங்க வேண்டும்.

பயன்கள்: இஞ்சி சாரு ரத்தத்தில் கலந்து தேவையற்று இருக்கும் கொழுப்பு படிமங்களை கரைத்துவிடுகிறது. மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. நாம் சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாக உதவுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உடலை தாக்காதவாறு பாதுகாக்கிறது.

ஒரு நெல்லிக்காய்

தினமும் ஒரு நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

பயன்கள்: நமக்கு எளிதில் கிடைக்கும் சத்துள்ள கனியான நெல்லிக்காயை தினமும் ஒன்று என்ற வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகிறது. ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 20 சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டதற்கு சமமாகும். இதயம், சிறுநீரகம், கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் உடலை அண்டாமல் பாதுகாப்பு தருகிறது.

வல்லாரைக் கீரை

இயற்கை அன்னை தரும் ஆரோக்கியமான உணவுகளில் கீரைகளும் ஒன்று. அதில் முக்கியமாக வல்லாரை கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

பயன்கள்: வல்லாரைக் கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாது உப்பு போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன் ஞாபக சக்தி, மூளை நரம்புகள் போன்றவைகள் வலுப்பெறவும் உதவுகிறது.