பாத்ரூமில் தேங்கிய தண்ணீர்.. அசால்டாக இருந்த தம்பதியினர்.. வெளியே வந்த 2 அடி மலைபாம்பு..!

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கணவர், மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர்.
அவர்களுடைய வீட்டில் கழிவு நீர் செல்லாமல் குளியலறையில் தேங்கி வந்துள்ளது. அந்த நீர் வெளியேற அதிக நேரம் எடுத்துக் கொண்டதால். உள்ளே ஏதாவது இருக்கும் என்று அசால்டாக விட்டுவிட்டனர்,
அதன் பின் குழியலறையில் நீர் தேங்குவது ஓர் தொடர்கதையாகவே இருந்துள்ளது. இதனால் அதனை சரி செய்ய ஒரு பிளம்பரை அழைத்தனர். அங்கு வந்து பார்த்த பிளம்பர், பிரச்சனை இருப்பதாக தெரிவில்லை என்றார்.
அதனை தொடர்ந்து கழிவுநீர் வெளியே செல்லும் தூவாரத்தில் ஊற்றுபார்த்தார் அதில் ஒரு பாம்பு இருப்பதை கண்டறிந்தார். முழுமையாக துவாரத்தை திறந்து பார்த்த பிளம்பர் அதில் இருந்த 2 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பை அலேக்காக மேலே எடுத்துள்ளார்.

இந்த பாம்பானது சாக்கடை வழியாக வந்திருக்கலாம் என கூறினார். அந்த தம்பதியினர் பாம்பை வெளியே எடுக்கும் போது வீடியோ எடுத்துள்ளனர். அதனை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்ததால். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகுகிறது.