வாய்புண் மற்றும் குடல் புண்களை குணப்படுத்தும் முளைக்கீரை கூட்டு

முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. முளைக்கீரையில் கூட்டு தயார் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முளைக்கீரை – 2 கட்டு

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

துவரம் பருப்பு – 100 கிராம்

மிளகாய் பொடி – அரை ஸ்பூன்

பெருங்காயம் – தேவையான அளவு

நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2

தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில், முளைக் கீரையை நன்கு ஆய்ந்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வெங்காயத்தையும் பொடியாக அரிந்துகொள்ளவும். துவரம்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, நன்கு மசித்துக்கொள்ளவும்.

பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு வறுக்கவும்.அடுத்து, நறுக்கி வைத்துள்ள கீரையையும் சேர்த்து சீரகம், உப்பு, மிளகாய்ப்பொடி கலந்து சிறிது நேரம் வேக வைக்கவும். பிறகு, ஏற்கெனவே மசித்து வைத்துள்ள பருப்போடு தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பயன்கள்

உடல் சூடு குறையும். வாய்ப்புண் குணமாகும். குடற்புண் உடனே ஆறும். உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம்.

Recent Post