Search
Search

தளபதி விஜய்க்கு ஒரு பான் இந்தியா கதை.. சில ரகசியங்களை உடைத்த மிஸ்கின்!

இயக்குநர் மிஸ்கின், தனக்கென தனி வழி அமைத்து பயணித்து வரும் ஒரு நல்ல இயக்குநர். முதன் முதலில் தளபதி விஜயின் யூத் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், அன்று முதலே இவர்கள் இருவரிடையே ஒரு நல்ல நட்பு இருந்து வருகின்றது.

அதன் பிறகு சுமார் 21 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தளபதி விஜயுடன், லோக்கியின் லியோ படத்தில் தற்போது நடித்து வருகின்றார் அவர். இயக்குனர், பாடகர் மற்றும் நடிகர் என்று பல திறமைகள் கொண்ட மிஸ்கின் அண்மையில் ஒரு சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

விஜய்க்கு நல்ல சுவாரசியமான ஒரு பான் இந்தியா திரைப்படம் எடுக்க உள்ளதாகவும், தன்னால் ஒரு போன் காலில் விஜயுடன் பேசிவிட முடியும், ஆனால் அந்த கதை அவரையும் அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

நிச்சயம் அவருக்கு பிடித்த கதையை, ஆத்மார்த்தமாக நான் அவரிடம் கூறுவேன், அதற்கு சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் இயக்குனர் மிஸ்கின் கூறியுள்ளார். பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மிஸ்கின் இயக்கத்தில் விஜய் நடித்தால் அது வேற லெவல் ஹிட்டாகும் என்பதில் சதேகமில்லை.

You May Also Like