நானே வருவேன் திரை விமர்சனம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் நானே வருவேன். யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

தனுஷ் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள். அதில் ஒரு குழந்தையின் பெயர் பிரபு. இன்னொரு குழந்தையின் பெயர் கதிர். சிறு வயதிலிருந்து கெட்ட எண்ணங்களுடன் இருக்கும் கதிர் ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பா அம்மாவையே கொன்றுவிட்டு தனி மரமாக வாழ்ந்து வருகிறார்.
பல வருடங்கள் கழித்து பிரபு தனது மனைவி மகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார். அப்போது தனுஷின் மகள் தனியாக பேசுகிறார். அவர் மீது ஒரு ஆவி இருப்பதே கண்டுபிடிக்கிறார். அந்த ஆவி ஒரு கோரிக்கை வைக்கிறது. அதை செய்தால் மட்டுமே உன் மகளை விட்டுப் போவேன் என சொல்கிறது.
தனுஷும் அதை செய்யத் துணிகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? தனுஷ் தன் மகளை மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதின் கதை.
கதிர், பிரபு என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிப்பை மிரட்டி எடுத்துள்ளார். பிரபு கதாபாத்திரத்தில் பயந்த சுபாவம் கொண்ட மனிதராக நடித்துள்ளார். மறுப்பக்கம் கதிர் கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக மிரட்டுகிறார்.
தனுஷ் மகளாக நடித்தவர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் முதல் பாதியில் இருந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை. அதே நேரத்தில் வில்லன் தனுஷ் தனது அசுர நடிப்பால் இரண்டாம் பாதியை நகர்த்துகிறார்.
செல்வராகவன் படம் என்றாலே வசனம் பேசப்படும், இதில் வசனங்களே பெரிதாக இல்லை. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் யுவனின் பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம்.
மொத்தத்தில் நானே வருவேன் ‘ ஹாரர் திரில்லர் மூவியாக வெளிவந்துள்ளது.