நகசுத்தியை குணமாகக்கும் எளிய மருத்துவம்

நகத்தைச் சுற்றி ஏற்படும் பூஞ்சை மற்றும் கிருமி தொற்றுதான் நகச்சுற்று என்று சொல்லப்படுகிறது.

நகத்துக்கு வெளியே இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளுக்குள் நுழைந்து அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சீழ் கோர்க்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் நகச்சுற்றாக மாறிவிடுகிறது.

அவ்வப்போது நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும். பாக்டீரியா, பூஞ்சைகள் தேங்காத வண்ணம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

Advertisement

நகச்சுற்று குணமாக மருத்துவங்கள் என்ன?

கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து, விளக்கெண்ணெய் விட்டு சூட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகசுத்தி குணமாகும்.

வைட்டமின் ஈ எண்ணெயை தேய்த்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

சாதாரண கல் உப்பை நீரில் கரைத்து பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நக சுத்தி சரியாகும்.

நீரில் மஞ்சளை கலந்து நகத்தில் தடவினால் போதும். மஞ்சளை விட மருத்துவம் எதுவும் இல்லை.

வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும், விரலை சுற்றிலும் தேய்த்து வர, நக சுத்தி விரைவில் குணமாகும்.

நக சுத்தியால் ஏற்படும் வலியையும் தேங்காய் எண்ணெய் குறைக்கிறது. தேங்காய் எண்ணெய்க்கு காயங்களை ஆற்றும் தன்மை உள்ளது.