Search
Search

“இதை ஒவ்வொரு நாளும் செய்கின்றேன்” – மனம் திறந்த நேஷனல் க்ரஷ் ரஷ்மிக்கா

வெறும் 19 வயதில் நடிக்க தொடங்கி இன்று தனது 26 வது வயதில் “நேஷனல் க்ரஷ்” என்ற பெயரை ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ள சூப்பர் ஹிட் நடிகை தான் ரஷ்மிக்கா மந்தனா. கர்நாடகாவில் பிறந்த இவர் கிரீக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார்.

தொடர்ச்சியாக கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் ரஷ்மிகா, முதன் முதலில் தமிழில் களமிறங்கியது கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் தான். அதன் பிறகு இந்த ஆண்டு வெளியான வம்சியின் வாரிசு படத்தில் தளபதி விஜயுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் தற்பொழுது நடித்து வரும் ரஷ்மிகா ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி தற்பொழுது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் நான் என் உறவுகளை மிகவும் மதிப்பவள் என்று கூறியுள்ளார்.

அதிகாலை எழுந்ததும் என்னுடைய செல்லப் பிராணிகளுடன் கொஞ்ச நேரத்தை செலவிடுவேன் என்றும், அதன் பிறகு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பெரியவர்களை மதிக்கும் விதமாக தினமும் என் வீட்டில் வேலை செய்யும் வீட்டு பணியாளர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

You May Also Like