Search
Search

நவரசா விமர்சனம் : அதிதி பாலன் நடித்த பாயாசம்

டெல்லி கணேஷும், ரோகினியும் கணவன் – மனைவி. இவர்களுடைய மகள் அதிதி பாலன் திருமணமான 3 மாதங்களில் கணவரை இழந்து விதவை ஆகிறார். டெல்லி கணேஷ் தனது மகளின் நிலைமையை நினைத்து தவிக்கிறார். அந்த சமயத்தில் டெல்லி கணேஷ் அண்ணனின் பேத்திக்கு திருமணம் நடக்கிறது.

தனது அண்ணன் குடும்பம் மீது வெறுப்புடன் இருக்கும் டெல்லி கணேஷ் அந்த திருமணத்தில் வேண்டா வெறுப்புடன் கலந்து கொள்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

அருவருப்பு என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் வசந்த். டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகிணி ஆகியோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார். டெல்லி கணேஷ் கிராமத்து முதியவராக நடித்து அசத்தியுள்ளார்.

1960-களில் நடப்பது போல திரைக்கதை செல்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ஆனால் திரைக்கதை மெதுவாக செல்வதால் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.

You May Also Like