நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பரிபூரண நவாசனம்

பரிபூரண நவாசனம் செய்தால் உடலும் மனதும் உற்சாகமடையும். பரிபூரண ஆரோக்கியத்தை வாழ்வில் பெறலாம். இதனால் இந்த ஆசனம் பரிபூரண நவாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

விரிப்பில் நேராக படுத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும். பிறகு மூச்சை இழுத்துக்கொண்டே கைகளையும் கால்களையும் உயர்த்த வேண்டும். கைகளை கால் பெருவிரல் நோக்கி கொண்டு வரவும். பின் இரு கைகளையும் இரு கால்களுக்கு அடியில் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.

இந்நிலையில் பத்து விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு மெதுவாக சாதாரண நிலைக்கு வரவேண்டும். இதே போல் மூன்று முறைகள் செய்யவும். ஒவொரு முறை செய்யும் போது ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

பலன்கள்

இந்த ஆசனம் செய்வதால் முகத்திலுள்ள எல்லா தசைகளும் சிறப்பாக செயல்பட்டு முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளும்.

சிறுகுடல், பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேறி குடல் சுத்தமாகும். மேலும் இந்த ஆசனம் செய்தால் குடல் இறக்கம் வராமல் குடலை திடப்படுத்துகின்றது.

கழுத்து வலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி நீங்கி முதுகெலும்பு பலம் பெறும். சிறுநீரக உறுப்பை வலுவாக்கும்.

இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த ஆசனம் செய்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

உடல் நடுக்கம், கைகால் நடுக்கத்தை சரி செய்யும்.

பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனை, ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு பிரச்சனை ஆகியவை சரியாகும்.

Recent Post