தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத பலன்கள்

மருத்துவ குணம் நிறைந்த கனிகளில் நெல்லிக்கனியும் ஒன்று. நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவைகளை கொண்டது.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவை வளமாக நிறைந்துள்ளது.

நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். இதனால் உடல் எடை குறையும்.

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் அதனை தொடர்ந்து சாப்பிடும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நெல்லிக்காய் சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறைவதை காணலாம்.

நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறும். இதனால் இளமையான தோற்றத்தை உருவாக்கும்.

முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் வேதி பொருட்களும் நெல்லிக்கனியில் நிறைந்துள்ளன.

நெல்லிக்காயில் உள்ள குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. மாரடைப்பு வருவதை தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது.

சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு தடுக்கப்படுவதோடு சிறுநீர் பிரிவதிலும் பிரச்சனை இருக்காது.

நெல்லிக்காயில் கால்சியம் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்துவந்தால் அவர்கள் உறுதியான எலும்பை பெற்று ஆரோக்கியமாக வளருவார்கள்.

செரிமானப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சாப்பிடுவதற்கு முன் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது இதனால் சளி இருமல் காய்ச்சல் போன்ற வியாதிகளை எதிர்த்து போராடுவோம்.

நெல்லிக்காய் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. கல்லீரலில் உண்டாகும் நோய்த்தொற்றையும் கிருமிகளையும் அழிக்கிறது.

Recent Post