இனி புது ரூல்ஸ்.. சிவா போடும் புதிய பிளான் – வெளியானது சூதுகவ்வும் 2 அப்டேட்!

நடிகரும், எழுத்தாளருமான நலன் குமாரசாமி எழுதி, நடித்து, இயக்கி வெளியிட்ட முதல் திரைப்படம் தான் சூது கவ்வும். 2013ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய திரைப்படம்.
இந்த படத்தை அப்பொழுது பிரபல தயாரிப்பாளர் சி.வி குமார் தயாரித்து வெளியிட்டார். இந்நிலையில் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். நேற்று இந்த திரைப்படத்தின் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.
மீண்டும் இந்த படத்தை சி.வி குமார் தயாரிக்க, சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே அர்ஜுன் இயக்கி வெளியிட உள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்றும் கதையின் நாயகனாக நடிகர் சிவா களம் இறங்குவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராதாரவி, சத்யராஜ் மற்றும் கருணாகரன் என்று நக்கலுக்கு பெயர் பெற்ற பல முக்கியமான முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.