நோன்பு கஞ்சி குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

ரமலான் நோன்பு காலத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து நோன்பு திறந்த பிறகு திட உணவுகளை சாப்பிடுவார்கள். அது உடலுக்குச் சில தொந்தரவுகளைத் தரும் என்பதால் அதனை தடுப்பதற்கு உதவும் ஓர் அற்புதமான உணவுதான் இந்த நோன்பு கஞ்சி.

இந்த நோன்புக்கஞ்சியை நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் குடித்தால் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெற உதவும். மேலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

நோன்பு ஆரம்பித்து முதல் இரண்டு நாள்கள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். மேலும், உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதனை தவிர்க்க நோன்பு கஞ்சி எடுத்துக்கொள்ளப் படுகிறது.

நோன்பு கஞ்சி சாப்பிடுவதால் நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடுகிறது. நோன்புக் கஞ்சியில் இருக்கும் மசூர் பருப்பானது உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.

நோன்பு கஞ்சியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி, புதினா, மஞ்சள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தக்காளி ஆகியவை வயிற்றில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

இந்த கஞ்சியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எளிதில் ஜீரணமாகும். வயிறு நிறைந்த ஓர் உணர்வை தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும்.

நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் இதனை சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும்.

Recent Post