Connect with us

TamilXP

திருநாகேஸ்வரம் அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு

temple history in tamil

ஆன்மிகம்

திருநாகேஸ்வரம் அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு

ஊர் : திருநாகேஸ்வரம்

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : ஒப்பிலியப்பன்

தாயார் : பூமாதேவி

தீர்த்தம் : அஹோத்ரபுஷ்கரணி

சிறப்பு திருவிழாக்கள் : புரட்டாசி,ஐப்பசி,பங்குனியில் பிரம்மோற்ஸவம்

திறக்கும் நேரம் : காலை 6:00மணி முதல் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

temple history in tamil

பெருமாளின் மனைவியும் மகாலட்சுமியின் அம்சமான பூமாதேவி ,விஷ்ணுவிடம் எப்போதும் லட்சுமியை மட்டும் மார்பில் தாங்கி கொண்டிருக்கிறீர்கள் எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள் என்று கேட்டால். பெருமாளும் பூமாதேவி எண்ணியபடி, நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக துளசி என்ற பெயரில் பிறப்பாய் என ஆசீர்வதித்தார். இச்சமயத்தில் என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவம் இருந்தார்.

லட்சுமியின் அம்சமான பூமாதேவி குழந்தை வடிவில் ஒரு துளசி செடிக்கு கீழே கிடப்பதை கண்டார் மார்க்கண்டேய மகரிஷி. தன் தவ வலிமையால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது திருமால் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவரிடம் பெண் கேட்டார். மகரிஷி சம்மதிக்கவில்லை. மேலும் சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு கூட போட தெரியாது. அப்படிப்பட்ட ஒரு சிறிய பெண்ணை எப்படி உங்களுக்கு மணம் முடிப்பது, இது சரிவராது என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை.

உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் ஞான திருஷ்டியால் வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து தன் மகளை மணம் முடிக்க ஒப்புக்கொண்டார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும் ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று, அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசி தேவி அவர் மார்பில் துளசி மாலை ஆக மாறி நிரந்தரமாகத் தங்கினாள். இதனால் தான் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலையை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 13 வது திவ்யதேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு உண்டானது போல், இப்பெருமானுக்கு தனி சுப்ரபாதம் உண்டு. மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று திருமால் பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. அது முதல் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு ,அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி வீற்றிருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருடவாகனத்தில் உதய கருடசேவை அருள்கிறார். இத்தலத்தில் சுவாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசம் ஆன “மாம் ஏகம் சரணம் விரஜ’ என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு என்னை சரணடைந்தவர்களை காப்பேன் என்று பொருள். இங்கு மூலவர் ,உற்சவர் ,பிரகார சன்னதி மற்றும் மணியப்பன்,. முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். மணியப்பன் சன்னதியில் சுவாமியுடன் சங்கு சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம். இக்கோயிலில் நிவேதனம் உப்பில்லாமல் தயாரிக்கப்படுகிறது.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால் ஆயுள் விருத்தி , மிருத்தியஞ்ச ஹோமம் நடக்கிறது. இங்குள்ள குளத்தில் இரவு பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது ஒரு சிறப்பம்சம். அனைத்து பெருமாள் ஸ்தலங்களிலும் பூமாதேவி இடது புறத்தில் இருப்பாள். ஆனால் அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால் சுவாமிக்கு வலதுபுறத்தில் இருக்கிறாள். மார்க்கண்டேயர் ,பெருமாள் ஒரு போதும் தன் மகளை விட்டு பிரிய கூடாது என்ற நிபந்தனை விதித்தார். எனவே பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருகிறார்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top