இடுப்பும், பாதமும் வலுவாக்கும் பாத ஹஸ்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

0
869

இடுப்புக்கும், பாதங்களுக்கும் வலுவைத் தரும் ஆசனம் எனபதால் பாதஹஸ்தாசனம் என்ப்படுகிறது.

பாதஹஸ்தாசனம் செய்முறை
தரைவிரிப்பில் நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பின் சுவாசத்தை வெளியிட்டுக் கொண்டே குனிந்து கைகளை மடக்காமல் கீழே கொண்டு வந்து கால் பெருவிரலைப் பிடித்தக் கொள்ள வேண்டும்.
அதே சமயம் மூக்கால் கால் மூட்டைத் தொட வேண்டும். கால்கள் மடங்கக் கூடாது. இந்நிலையே பாத ஹஸ்தாசனம் நிலையாகும். இரண்டு மூன்று வினாடிகள் ஆசன நிலையில் இருந்த பின் சுவாசத்தை உள்ளிழுத்துக கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இரண்டு மூன்று முறை செய்யலாம்.
பாதஹஸ்தாசனம் பலன்கள்

 

  • தோல் சம்பந்தமான வியாதிகள் அணுகாது
  • வாதத்தை தடைசெய்யும்
  • தொந்தியை கரைக்கும்
  • மார்பை விரிவு படுத்தும்
  • இடுப்பும், பாதமும் வலுப்பெறும்
  • உடலை பொலிவுடன் விளங்கச் செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here