Search
Search

தினசரி உணவில் பன்னீர் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

paneer payangal in tamil

பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. பன்னீரில் கால்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் எ, வைட்டமின் டி என பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.

ஒவ்வொரு 100 கிராம் பன்னீரில் 265 கலோரிகள், 20.8 கிராம் கொழுப்பு, மொத்த கார்போஹைட்ரேட்டின் 1.2 கிராம் உள்ளது. 18.3 கிராம் புரதம் மற்றும் 208 மிகி கால்சியம போன்ற சத்துக்கள் உள்ளன.

அதிகளவு உடற்பயிற்சி செய்யும் நபர்கள் அதிகளவு புரதம் கொண்ட பன்னீரை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

paneer health benefits in tamil

மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்கள் பன்னீரை சேர்த்துக் கொள்ளலாம். சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு அளிக்கிறது. பன்னீரில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவும். மேலும் இதில் லாக்டோஸ் அளவு குறைவாக இருப்பதால் பல் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பன்னீரில் உள்ள செலினியம் மற்றும் பொட்டாசியம், ஆண்களின் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்களை தடுக்கும். ஆண்களின் பிறப்புறுப்பை தாக்கும் ப்ரோஸ்டேட் என்கிற புற்றுநோயை இது தடுக்கும்.

தினசரி உணவில் பன்னீர் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதி படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் இதில் உள்ள விட்டமின் பி, குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.

பன்னீரில் உள்ள அதிகப்படியான ஜின்க் சத்து ஆண்களின் விந்தணுவை அதிகரிக்க செய்யும். விந்தணு தொடர்பான நோய்களையும் தடுக்கும்.

பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கீல்வாதத்தை எதிர்த்து போராடும். இந்த ஒமேகா 3 கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை தரும்.

தினசரி உணவில் பன்னீர் சேர்ப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும். பன்னீரில் உள்ள செலினியம் பளபளப்பான சருமத்தை தருகிறது.

You May Also Like