பித்த வெடிப்பு பிரச்சனையிலிருந்து விடுதலை

பெண்களின் கால் அழகை கெடுப்பதில் பித்த வெடிப்பிற்கு முக்கிய இடம் உண்டு. பனிக்காலம், மழைக்காலங்களில் பித்தவெடிப்பு அதிகமாகவே பாதிப்பை ஏற்படுத்தும்.

உடலின் நீர் சத்து  குறைவது, அதிக உடல் எடை, உடல் சூடு, வறட்சி சருமம் இதெல்லாம் பித்த வெடிப்பிற்கு காரணம். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தபடியே சரி செய்யலாம்.

இரவு படுக்கும் முன், கால் பாதத்தை சோப்பினால் சுத்தம் செய்யவும். பின்னர் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணைய், ஆலிவ் ஆயில் என ஏதேனும் ஒரு எண்ணெய்யை எடுத்து  பித்த வெடிப்பின் மேல் நன்றாகத் தேய்க்கவும்.

வேலைகளை எல்லாம் முடித்தபிறகு எலுமிச்சை சாறை வெடிப்பின் மீது தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

வாழைப்பழம், துருவிய தேங்காய் நன்றக கலந்து கொள்ளவும், பசை போல் ஆனதும் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்த்து 10 முதல் 15 நிமிடம் வரை காயவிடவும். பின்னர் தண்ணீரில் கழுவினால் வெடிப்புகள் குறையும்.

கால்சியம், இரும்பு, துத்தநாக சத்துக்கள் அடங்கிய உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் 4 வாரத்தில் வெடிப்புகள் காணாமல் போய்விடும்.

Recent Post