பேரிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்

பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. பேரிக்காயில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்து ஆகியவை உள்ளது. பேரிக்காய் ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.

பேரிக்காய் நம்ம உடலில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.

berikai fruit in tamil

சிறுநீரை வெளியேற்றி, சிறுநீரக செயல்பாட்டை சரி செய்யும். மேலும் சிறுநீரகத்தில் உருவாகும் கற்களையும் இது சரி செய்யும்.

Advertisement

இதயம் பலவீனமானவர்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேரிக்காயை தோலுடன் சாப்பிட வேண்டும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்யும்.

கர்ப்பிணி பெண்கள் பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும்.

பால் கொடுக்கும் தாய்மார்கள் காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

பேரிக்காயில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளதால் வளரும் குழந்தைகள் இதனை சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.