பேட்ட திரை விமர்சனம்

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி,சிக்குமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா என தமிழ் சினிமாவின் அத்தனை பிரபல நடிகர்கள் நடித்துள்ள படம் பேட்ட.

ஒரு கல்லூரியில் பாபி சிம்ஹா டெரர் கேங் என்ற பெயரில் ஜுனியரை அட்டகாசம் செய்து வருகிறார். அந்த கல்லூரிக்கு வரும் ரஜினிகாந்த் முதல் நாளே அவர்கள் கொட்டத்தை அடக்குகிறார்.

அதே கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷை காதலிக்கிறார்.
ஒரு பக்கம் இவர்கள் காதலுக்கு ரஜினி உதவி செய்ய, இன்னொரு பக்கம் பாபி சிம்ஹா ரஜினியை அடிக்க ஆள் செட் செய்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினியை அடிக்க வந்த ஆட்கள் வேற ஒரு கேங் என்பது தெரியவருகிறது.

அவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்மந்தம்? எதற்காக அன்வரை கொலை செய்ய வருகிறார்கள்? என்பதுதான் பேட்ட படத்தின் பரபரப்பான கதை.

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் முதல் பாதியில் ஒரு வார்டனாக மாணவர்களிடம் அன்பு, கண்டிப்பு அதே நேரத்தில் வில்லனிடம் அதிரடி என பட்டைய கிளப்புகிறார்.

நவாஸுதீன் கேங் அட்டாக் செய்யும் போது ரஜினி எடுக்கும் அதிரடி காட்சிகள் ரசிகர்களுக்கு செம விருந்து.

படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார். அனிருத். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி செம ஹிட் ஆகியுள்ளது.

படத்தில் சண்டைக் காட்சிகளும், அது இடம் பெறும் இடமும் படத்துக்கான கூடுதல் பலமாக இருக்கிறது.

புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே பார்த்து பழகிப்போன கதைதான் இந்த பேட்ட. இது ரஜினி படம் என்பதால் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போனது வருத்தமளிக்கிறது.