மாபெரும் விபத்தில் இருந்து தப்பினேன்.. பிச்சைக்காரன் 2 நாயகி காவ்யா தாப்பர்!

விஜய் ஆண்டனி இயக்கத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் தான் பிச்சைக்காரன் 2, வருகிற மே 19ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளிவருகிறது. நாயகன் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழு இந்த படத்திற்கான பிரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்திற்கான படபிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி பகுதியில் நடைபெற்று வந்தது. அங்கு ஒரு கடற்பகுதியில் படபிடிப்பு நடந்து வந்தபொழுது ஜெட்ஸ்கியில் நடிகர் விஜய் ஆண்டனியும் இந்த படத்தின் நாயகி காவியா ஆகிய இருவரும் செல்வது போன்ற காட்சி அமைப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது.
முதல் முறை விஜய் ஆண்டனி சரியாக அந்த ஜெட்ஸ்கியை இயக்கி முடித்துள்ளார், இருந்தாலும் இரண்டாவது ஷாட் இன்னும் அழகாக எடுக்கலாம் என்று நினைத்து மீண்டும் அவர் அந்த ஜெட்ஸ்கியை இயக்கி சென்றுகொண்டிருந்தபோது தான் துரதிஷ்டவசமான அந்த சம்பவம் நடந்துள்ளது.
எதிர்பாராத விதமாக படம் எடுத்துக் கொண்டிருந்த அந்த போட்டின் மீது இவருடைய ஜெட்ஸ்கி வேகமாக சென்ற மோதியதில் அவருடைய தாடை எலும்புகள், மூக்கு மற்றும் கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சுயநினைவு இன்றி கடலில் விழுந்துள்ளார்.
இந்நிலையில் பின்னே அமர்ந்திருந்த நாயகி காவியா அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட, அவர் சுதாரித்து நீச்சல் அடித்து அருகில் சுயநினைவின்றி கடலில் மிதந்து கொண்டிருந்த நாயகன் விஜய் ஆண்டனியை காப்பாற்ற சென்றுள்ளார்.
அப்பொழுது படக்குழுவும் அங்கு விரைந்து வர, காவியாவும் படக்குழுவும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளனர். இந்த அனுபவம் உண்மையில் திகிலூட்டும் விதமாக இருந்தது என்று நாயகி காவியா தற்பொழுது தெரிவித்துள்ளார்.