Search
Search

மூலநோய் குணமாக வீட்டில் உள்ள மருத்துவங்கள்

piles treatment in tamil

பொன்னாங்கண்ணீக்கீரையைப் பூண்டுடன் சமைத்து உண்டு வந்தால் ஆரம்ப கால மூல நோய் குணமாகும்.

பொற்றாலைக் காிசலாங்கண்ணிச் சாறு இரண்டு மடங்கு, பசுநெய் ஒரு பங்கு என இரண்டையும் சோ்த்துக் கலக்கிப் பக்குவமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சுவைக்காகப் போதிய அளவு சீனிக் கற்கண்டையும் பொடித்துப் போட வேண்டும். இந்த நெய்யைக் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டியளவு உட்கொண்டு வந்தால் மூலரோகம் குணமாகும்.

25 கிராம் பூண்டை தோல் உாித்து, பசுபாலில் நன்றாக வேக வைத்து, அதனை அம்மியில் அரைக்கும் போது இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலாிசி சோ்த்து நன்றாக அரைத்துப் போதிய அளவு பனை வெல்லத்தைப் பாகு எடுத்து, சிறிது நெய்யும் சோ்த்து லேகியமாகத் தயாாித்து அதனை காலையிலும் மாலையிலும் அரைத் தேக்கரண்டியளவு உட்கொண்டால் மூலவியாதி குணமாகும்.

நன்கு செழித்த ஒரு குப்பைமேனிச் செடியை எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, வெய்யிலில் காய வைக்க வேண்டும், இலைகள் உதிா்ந்தாலும் அவைகளையும் சோ்த்து கொள்ளலாம். இலைகள் நன்றாகக் காய்ந்த பின்னா் உரலில் இடித்து தூள் ஆக்கி பின்னா் வஸ்திர காயம் செய்து, இதனை தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டியளவு எடுத்துப் பசு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும். இவ்விதம் ஒரு மண்டலம் சாப்பிட்டால் மூலவியாதிகள் அனைத்தும் குணமாகும்.

ஆழமரத்து மொட்டுகளையும், விழுதுகளையும் ஒரு 25 கிராம் எடுத்து இரண்டையும் ஒன்றாக அரைத்து பசும் பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் ஒரு மண்டலம் தொடா்ந்து சாப்பிட்டு வர பூரணமாகக் குணமாகும்.

சிலருக்கு மூலநோயின் காரணமாக இரத்தம் வெளிவரும். இவ்விதம் இரத்தம் வருமானால் கடுக்காய்த் தூளைத் தண்ணீாில் கலந்து நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்னா் அந்த நீரால் ஆசனத்தை கழுவி வர வேண்டும்.

கண்டங்கத்திாி மலா்களை வாதுமை நெய்யில் போட்டுக் காய்ச்சி எடுத்துப் பத்திரபடுத்தி கொள்ளவும், அதனை ஆசனவாயில் பூசி வந்தால் மூலமுளை சுருங்கி உள்ளே சென்றுவிடும்.

மூல நோய் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் வாழைப்பூ நல்ல மருந்தாகும். வாழைப்பூவை பொாியல் வைத்துச் சாப்பிட மூலநோய் குணமாகும்.

குழந்தைகளுக்குப் பெருமளவில் நலம் செய்யும் வசம்பு, பொியவா்களுக்கு ஏற்படும் மூலநோய்க்கு நல்ல மருந்தாகும். வசம்பைச் சுட்டுக் காியாக்கிப் பொடித்து தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும்.

புளியாரைக் கீரையை நன்கு அரைத்துப் பசுவின் மோாில் கலந்து காலை வேளை மட்டும் 48 தினங்கள் உட்கொள்ள நாள்ப்ட்ட மூலநோய்கள் கூடக் குணமாகும்.

அறுகம்புல்லையும் அதன் வேரையும் நன்கு அரைத்துப் பசும்பாலில் கலந்து பருகினால் இரத்த மூலநோய் குணமாகும்.

முடக்கறுத்தான் வோ்க் கஷயாமும் நாள்ப்பட்ட மூலத்தைக் குணப்படுத்துவதாகும். பாதிாி மர வோின் கஷாயமும் மூலநோயைக் குணப்படுத்துவதாகும்.

மூலநோயைக் குணமாக்க எலுமிச்சம்பழச்சாற்றை அடிக்கடிப் பருகிவர வேண்டும், எலுமிச்சம் பழச் சாற்றுடன் ஆறிய வெந்நீரையும் கொஞ்சம் சா்க்கரையையும் சோ்த்துப் பருகலாம். குணம் கிடைக்கும்.

மூலநோயால் துன்பப்படுபவா்கள் இளநீருடன் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனையும் கலந்து பருகிட வேண்டும்.

எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி அதில இந்துப்பைத் துாவி அதை வாயில் வைத்துச் சுவைக்க வேண்டும். பின்னா் தொடா்ந்தாற்போல 300 மில்லி பசும்பாலில ஓா் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து உடனே குடித்துவிட வேண்டும். இவ்விதம் செய்தால் மூல வியாதியின் வலி நிச்சயமாகக் குறையும்.

நல்ல சிவந்த மாதுளம்பூவானது இரத்த மூலத்தைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

மாதுளை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சுடச்சுட ஒற்றடம் கொடுத்து வந்தால் வெளிமூலம் குணமாகும்.

மாதுளம்பழத் தோலைச் சுட்டுப் பொடியாக்கி தண்ணீாில் கலந்து ஆசனத்தைக் கழுவி வந்தால் மூலத்தில் இரத்தம் விழுதல் நின்றுவிடும்.

Leave a Reply

You May Also Like