பொன்னியின் செல்வன் பாகம் 1 : மீண்டும் ரிலீஸ் செய்ய வாய்ப்பு – சின்னப்பழுவேட்டரையர் சொன்ன செய்தி!

பொன்னியின் செல்வன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து பலர் முயன்று அதை படமாக்க முடியாமல், இறுதியில் மணிரத்தினம் அவர்களுடைய முயற்சியால் கடந்த ஆண்டு உருவாகி வெளியான படம் தான் பொன்னியின் செல்வன்.
கவிஞர் கல்கி அவர்கள் எழுதிய ஒரு வரலாற்று புனைவுக்கதையே இந்த பொன்னியின் செல்வன். ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.
இதற்கான பின்னணி இசை அமைக்கும் பணிகள் முடிந்து சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு அரங்கத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் சின்ன பழுவேட்டரையராக தோன்றி நடித்த இயக்குனரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில் “மணி சாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையும் சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாக பார்க்க வசதியாக இருக்கும்” என்று கூறினேன்.
அவர் அதற்கு 21 ஏப்ரல் அன்று பொன்னின் செல்வன் முதல் பாகத்தை சில இடங்களில் ரிலீஸ் செய்ய யோசித்து வருவதாக கூறியுள்ளார் என்று கூறியுள்ளார். ஆகவே மீண்டும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஏப்ரல் 21ம் தேதி வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.