பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீடு : தடபுடலாக உருவாகும் அரங்கம் – உலக நாயகனே வருக வருக

மிகப்பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா வரலாற்றில் பலர் முயன்று இறுதியாக மணிரத்தினம் இதில் வெற்றி கண்டுள்ளார் என்று தான் கூறவேண்டும். சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இரண்டு பாகம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே இந்த இரு பாகங்களுக்கான ஷூட்டிங் முடிவடைந்த, நிலையில் தற்போது இரண்டாம் பாக பின்னணி இசை அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
நாளை (மார்ச் 29) சென்னையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது. பெரிய அளவில் அரங்கு அமைக்கப்பட்டு வருகின்றது. முதல் பாகத்தை போலவே பெரிய அளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
உலக நாயகன் கமல் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று அலங்கரிக்கவுள்ளார். சென்ற நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் அவர்களும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.