பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சோழப் பேரரசின் பேரரசரான சுந்தர சோழனுக்கு (பிரகாஷ் ராஜ்) ஆதித்த கரிகாலன் (விக்ரம்), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி), குந்தவை (திரிஷா) என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
தந்தையின் ராஜ்ஜியத்தில் பிரச்சனை வரப்போவதை ஆதித்த கரிகாலன் உணர்ந்து கொள்கிறார். இந்த செய்தியை தந்தைக்கு தெரியப்படுத்த வந்திய தேவனிடம் (கார்த்தி) பொறுப்பை ஒப்படைக்கிறார்.
இதற்கிடையில் சோழ படையில் இருக்கும் பெரிய பழுகுவேட்டையார் (சரத்குமார்), சின்ன பழுகுவேட்டையார் (பார்த்திபன்) மற்றும் சிற்றரசர்கள் தலைமையில் மதுராந்தகணை (ரகுமான்) அரசராக்க முயற்சிப்பதை வந்திய தேவன் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதே படத்தின் கதை.

ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். வல்லவராயன் வந்திய தேவனாக வரும் கார்த்தி நடிப்பில் தனித்துவம் பெறுகிறார். அவர் பேசும் வசனங்கள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறது.
நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பளிச்சிடுகிறார். அருண்மொழி வர்மானாக ஜெயம் ரவி இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். குந்தவையாக வரும் த்ரிஷா அழகிலும் நடிப்பிலும் பாராட்டை பெறுகிறார். மேலும் படத்தில் தோன்றும் பல கதாபாத்திரங்கள் அவர்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு மற்றும் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. படத்தில் தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் சிறப்பாக அமைந்துள்ளது.
ஒரு சரித்திர கதையை இந்த அளவுக்கு ரசிக்கும்படி சொல்லி இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.