வசூலில் கலக்கும் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ்..!

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பிரின்ஸ். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் பிரின்ஸ் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ், சூரி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. படம் வெளியான முதல் நாள் தமிழகத்தில் சுமார் ரூ. 6 கோடி வரை வசூல் செய்தது.
இரண்டாவது நாளில் சற்றும் குறையாமல் ரூ. 12 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.