சொதப்பியதா பிரின்ஸ் திரைப்படம் – முழு விமர்சனம் இதோ..!

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், பிரேம்ஜி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள படம் பிரின்ஸ். தீபாவளி விருந்தாக பிரின்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இப்படம் தமிழகத்தில் 600 திரைகளில் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பள்ளியில் ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன், அங்கு புதிதாக வேலைக்கு சேரும் பிரிட்டிஷ் பெண் மீது காதல் கொள்கிறார். சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திரப் போராட்ட குடும்பம் என்பதால் அவரின் அப்பா சத்யராஜ் பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை. மிகவும் சிம்பிளான இந்த கதையை இயக்குனர் அனுதீப் தன்னுடைய ஸ்டைலில் சொல்ல முயற்சித்துள்ளார்.

உக்ரைன் நடிகை மரியா இந்த படத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். சிவகார்த்திகேயனை தாண்டி இந்த படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது சத்யராஜ் தான். இவருடைய காமெடிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வரும் பாரத், சதீஷ், ராகுலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை. வில்லனாக வரும் பிரேம்ஜி வித்யாசமான நடிப்பை கொடுத்துள்ளார். தமன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
படமும் முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கதை மற்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்து இருந்தால் படம் நன்றாக வந்திருக்கும்.