Connect with us

TamilXP

அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில் வரலாறு

ஆன்மிகம்

அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில் வரலாறு

ஊர் : திருவெள்ளறை

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி.

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : புண்டரீகாட்சன்

தாயார் : செண்பகவல்லி

ஸ்தலவிருட்சம் : வில்வம்

தீர்த்தம் : மணிகர்ணிகா,சக்ர,புஷ்கல,வராக,கந்த,பத்ம தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள் : சித்திரை கோடை திருநாள் சித்ராபௌர்ணமி, கஜேந்திர மோட்சம், ஆவணி ஸ்ரீ ஜெயந்தி வீதியடி புறப்பாடு, பங்குனி திருவோணம் நட்சத்திரத்தில் ப்ரமோட்சவம்

திறக்கும் நேரம் : காலை 7:00 மணி முதல் 1:15 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

மஹாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் திருப்பாற்கடலில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பெருமாள் லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோசமாக உள்ளது. ஆகையால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அதற்கு லட்சுமி உங்கள் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு என்றார்.

ஆயினும் எனது பிறந்த இடம் ஆன இந்த பாற்கடல் இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்றார். அதற்கு பெருமாள் இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். உன்னது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இருந்தாலும் பூமியில் சிபிச்சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும் போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்றார்.

இந்தியாவின் தென் பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்தனர். அவர்களை அடக்க சிபிச்சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் பொது வெள்ளை பன்றி ஒன்று அவர்கள் முன் தோன்றி பெரும் தொந்தரவு கொடுத்தது.

படை வீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் திணறினர்,சக்கரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடமும் பிடி படாமல் இங்கு மலை மீது உள்ள குன்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது. அங்கு மார்க்கண்டேய முன்னிவர் நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு நான் தவம் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக உருவத்தில் காட்சி கொடுத்து இருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய் என்றார்.

அரசனும் அப்படியே செய்தார். நாராயணன் காட்சி கொடுத்தார். இந்த தரிசனத்திற்கு வந்த லட்சிமியிடம், ”நீ விரும்பியபடி இங்கு உனக்கு சகல அதிகாரமும் உண்டு. அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் அருள்பாலிக்கின்றேன்”என்றார் பெருமாள். பின்பு அரசன் ராவண ராட்க்ஷசனை அழிக்க சென்றார். மார்க்கண்டேயர் இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டுக்கு செல் என்றார். ஆனால் மன்னனுக்கு மனம் இல்லை. அப்படியானல் ”உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோவில் கட்டி திருப்தி பெறுக”என்றார்.

அரசனும் கோவில் கட்டி ,சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தார். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள் அரசனிடம் நீ கவலை கொள்ளாதே 3700 குடும்பங்களில் ஒருவராக இருந்து கோவில் பணியை நான் பார்த்து கொள்கிறேன் என்றார். பெருமாள் அளித்த வரத்தின் படி செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

பெருமாளின் 108திவ்ய தேசங்களில் இது 4வது திவ்ய தேசம். கோவில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்து உள்ளதால் ‘வெள்ளறை’ என பெயர் பெற்றது.

முன் கோபுரம் பூர்த்தி ஆகாத நிலையில் உள்ளது. இங்கு உள்ள பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கின்றது. அடுத்த கோபுரவாயிலில் நான்கு படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது.

பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி ”தட்சிணாயணம்’ ஆடி முதல் மார்கழி வரை திறந்து இருக்கும். இரண்டாவது வழி ”உத்தராயணம்’ தை முதல் ஆணி வரை திறந்து இருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் புத்திர பாக்யம் உண்டாகும் என்பது ஐதீகம்.

இங்கு பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். கோயில் பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top