அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில்

ஊர்: திருவண்புருசோத்தமம்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : புருஷோத்தமர்

தாயார் : புருஷோத்தம நாயகி

தீர்த்தம்: திருப்பாற்கடல் தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை.

திறக்கும் நேரம்: காலை 9:00 மணி முதல் 11:30மணி வரை, மாலை 6:00மணி முதல் இரவு 8:00மணி வரை.

தல வரலாறு

வியாக்ரபாதர் எனும் மகரிஷி தன் குழந்தையான உபமன்யுவை, இந்தக் கோயில் நந்தவனத்தில் இறைவனின் பூஜைக்கு பூப்பறிக்க வாசலில் விட்டு விட்டு சென்றார். அப்போது குழந்தை பசியால் அழுதது. திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாள், குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கணமே இத்தலத்தில் பாற்கடலையே உருவாக்கி குழந்தைக்கு படைத்தார். அழுத குழந்தைக்கு புருஷோத்தம நாயகி பால் அமுது ஊட்டினாள்.

108 திவ்ய தேசங்களில் இது 30 வது திவ்ய தேசம் ஆகும். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் .48 நாட்கள் “விஷ்ணு சஹஸ்ரநாமம்’ அர்ச்சனை செய்து கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்தால் எப்படிப்பட்ட பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகம். மணவாள மாமுனிகள் இங்கு சேவை செய்துள்ளார் .இங்கு 3 ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது. இத்தல பெருமாளுக்கு செண்பகப்பூ மிக விருப்பமான மலராக உள்ளது.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.