ராவடி பாடலுக்கு தயாரானது இப்படித்தான் – நாயகி சாயிஷா வெளியிட்ட வீடியோ

சாயிஷா ஆர்யா, 18 வயதி அஹில் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இவர். அதன் பிறகு ஹிந்தியில் ஒரு படம் நடித்துவிட்டு நம்ம கோலிவுட் பக்கம் வந்துவிட்டார். 2017ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் வனமகன் தான் இவர் நடித்த முதல் தமிழ் படம்.
அதன் பிறகு கார்த்திக்குடன் கடைக்குட்டி சிங்கம், மக்கள் செல்வனுடன் ஜூங்கா, தனது கணவருடன் கஜினிகாந்த் மற்றும் டெட்டி, சூர்யாவுடன் காப்பான் என்று தொடர்ச்சியாக கதையின் நாயகியாக நடித்து வருகின்றார் சாயிஷா.
இந்நிலையில் விரைவில் வெளியாகவிருக்கும் STRன் பத்து தல படத்தில் வரும் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார் சாயிஷா. ஏற்கனவே இந்த பாடல் வைரலாகி வரும் நிலையில் இந்த பாடலுக்காக தனக்கு போடப்பட்ட மேக் அப் குறித்த ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் அவர்.
ஆமா.. இந்த பாடலில் ஆட சாயிஷா 40 லட்சம் வாங்கினதாக சொல்றாங்களே அது உண்மையா?