உடல் எடை கூடுவதற்கு இதுவும் காரணமா..? அதிர்ச்சி தகவல்..!

உடல் எடை அதிகரிப்பது என்பது முக்கியமான பிரச்சனையாக இன்றைய காலகட்டத்தில் உள்ளது. ஃபிட்டாக இருக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், குறைந்துக் கொண்டே வருகிறது. சரியான உணவு பழக்கம் இல்லாதது, உடற்பயிற்சி சரியாக மேற்கொள்ளாதது போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, சரியாக தூக்கம் இல்லையென்றாலும், உடல் எடை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உடல் எடை அதிகரிப்புக்கு தூக்கமின்மையும் ஒரு காரணம்

ஜமா என்ற மருத்துவ இதழில் ஆய்வுக் கட்டூரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில், சரியான தூக்கம் இல்லாமல் இருப்பவர்களின் உடல் எடை, நல்ல தூக்கம் பெற்றவர்களின் உடல் எடையை விட, 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் ஜமா மருத்துவ இதழ் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அவர்களிடம் இருந்த ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களில் இருக்கும், ஸ்லீப் டிராக்கர், பிட்னஸ் டிராக்கர்ஸ் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் அன்றாட நடவடிக்கையை கண்காணித்துள்ளனர்.

Advertisement

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்

கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சராசரியாக தூங்குபவர்களை விட 15 நிமிடத்திற்கும் குறைவாக தூங்குபவர்களே உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்..?

தூங்கும் நேரம் என்பது, ஒவ்வொருவரின் உடல், எடை, உயரம், மனநிலை ஆகியவற்றைக் கொண்டு வேறுபடும். ஆனால், பொதுவாக 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆரோக்கியமான தூக்கத்தை எடுத்துக்கொள்ளும்போது உடலின் கொழுப்பு எரிக்கப்படும். குடல் சம்பந்தமான குரோனிக் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். மேலும், மூளை புத்துணர்ச்சியாக செயல்படுவதற்கும் ஆரோக்கியமான தூக்கம் அவசியம். குறைவான தூக்கத்தை எடுத்துக்கொள்ளும் இளைஞர்களில் 55 விழுக்காட்டினரும், 89 விழுகாடு குழந்தைகளும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர்.

ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. எனவே, நிம்மதியான தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்யுங்கள்.