Search
Search

ரெண்டகம் திரை விமர்சனம்

பெலினி டிபி இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்துள்ள படம் ‘ரெண்டகம்’. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியாகிறது.

Rendagam movie vimarsanam in tamil

மும்பையில் தாதாவாக இருந்தவர் டேவிட் (அரவிந்த் சாமி). ஒரு விபத்தில் தான் ஒரு தாதா என்ற பழைய நினைவுகளை மறந்து விடுகிறார். இவர் தாதாவாக இருக்கும் பொழுது கைமாற்ற வைத்திருந்த தங்கத்தை தவறவிட்டதால் அதனை தற்போது மீட்டெடுப்பதற்காக ஒரு குழு திட்டமிட்டு வருகிறது.

இதற்காக குஞ்சக்கோ போபனை அனுப்பி வைக்கின்றனர். போபன் அரவிந்த் சாமியிடம் நண்பனாக பழகி, நினைவை இழந்த மங்களூர்க்கு அழைத்து செல்கிறார். ஆனால் அங்கு வேறொன்று நடக்கிறது.

இறுதியில் டேவிட்டிடம் இருந்து பழைய விஷயங்களை பெற்றாரா? இல்லையா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிகதை.

டேவிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்த் சாமி பழைய நினைவுகளை மறந்த கதாப்பாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து பாராட்டுக்களை பெறுகிறார். குஞ்சக்கோ போபன் அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார்.

அரவிந்ந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது. இருந்தாலும் சில காட்சிகளில் வந்தாலும் முக்கியக் கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ் நடித்திருக்கிறார்கள்.

காஷிப் இசை, கவுதம் ஷங்கர் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இரண்டாம் பாதியில் கொடுக்கப்படும் பில்டப் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது. கிளைமாக்சுக்கு முன்பாக நடக்கும் துப்பாக்கி சூடுகள் நம்பும்படியாக இல்லை.

மொத்தத்தில் ரெண்டகம் – ரசிக்கலாம்.

You May Also Like