ஆருத்ரா நிறுவன மோசடி.. ஆர்.கே. சுரேஷ் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு!

கடந்த சில மாதங்களாகவே ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி பெரும் புகம்பத்தை கிளப்பி வருகிறது. சென்னையில் உள்ள அமைந்தகரையில் செயல்பட்டு வந்த அந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்துள்ளது.
இதை நம்பி அந்த நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர், இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அந்த நிறுவனம் சுமார் 2438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த மோசடி சம்பவத்தில், தமிழ் சினிமா நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக கட்சியின் நிர்வாகியுமான ஆர்.கே சுரேஷ் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவினர் அவருக்கு சம்மன் அனுப்பினர்.
ஆனால் இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டி, நடிகர் சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனதாக்கல் செய்திருந்தார். ஆனால் பல காரணங்களை முன்வைத்து அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம். சுரேஷ் தற்போது வெளிநாட்டில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.