Search
Search

ரோகினி திரையரங்கிற்கு வலுக்கும் எதிர்ப்பு – சொத்து வரி பிரச்சனை வேற இருக்காம்

நேற்று உலக அளவில் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியானது, கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வருகின்றது. இது ஒருபுறம் இருக்க சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு தனது குடும்பத்துடன் படம் பார்க்க வந்த நரிக்குறவ பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது, அவர்களிடம் உரிய டிக்கெட்டுகள் இருந்தும் திரையரங்க ஊழியர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். பிறகு இது குறித்து ஒரு விபர அறிக்கையை வெளியிட்ட ரோகிணி திரையரங்கம், பத்து தல திரைப்படம் U/A சான்றிதழ் பெற்ற படம் என்பதால் அந்த பெண்களுடன் வந்த அந்த குழந்தைகளை நாங்கள் அனுமதிக்கவில்லை.

இது தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறி அவர்களை படம் பார்க்க அனுமதித்த காணொளியையும் வெளியிட்டது. ஆனால் பொதுமக்களோ U/A என்பது குழந்தைகள் படம் பார்க்க கூடாது என்பது அல்ல, பெற்றோரின் மேற்பார்வுடன் தாராளமாக குழந்தைகள் படம் பார்க்கலாம் என்பது தான் அர்த்தம் என்று கூறி கடும் காட்டமாக தற்பொழுது ரோகிணி திரையரங்கிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் 2022 மற்றும் 2023ம் நிதியாண்டில் மட்டும் சுமார் 3.69 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் இருக்கும் ரோகித் திரையரங்க நிர்வாகத்திற்கு மாநகராட்சி பத்தாயிரம் அபராதம் விதித்துள்ளது. மேலும் நினைவில் உள்ள 24 லட்சம் சொத்து வரி தொடர்பாக உயர்நீதிமன்றதில் வழக்கு ஒன்றும் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like