நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் ருத்ர முத்திரை

வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு உள்ளவர்கள், அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்து வரலாம். இந்த ருத்ர முத்திரை செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

rudra mudra in tamil

ருத்ர முத்திரை செய்முறை

நாற்காலியில் அல்லது தரை விரிப்பின் மீது நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். படத்தில் உள்ளபடி கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரலின் நுனி பகுதியை தொடும் படி வைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டியபடி இருக்க வேண்டும். இதனை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

Advertisement

ருத்ர முத்திரை பலன்கள்

இந்த முத்திரை செய்வதால் தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த முத்திரை பயன்படும்.

ரத்த அழுத்தப் பிரச்சனை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

பார்வைத்திறனை அதிகரிக்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.