Search
Search

சாணிக் காயிதம் விமர்சனம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாணிக் காயிதம்’ படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.

Saani Kaayidham Movie Review Tamil

கீர்த்திசுரேஷின் கணவர் அரிசி மில்லில் வேலை பார்த்து வருகிறார். அரிசி மில் ஓனருக்கும் இவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இதனால் கீர்த்திசுரேஷின் கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்கின்றனர்.

இதனையடுத்து காவல் துறையில் பணிபுரியும் கீர்த்திசுரேஷை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். மேலும் கீர்த்திசுரேஷின் கணவர் மற்றும் அவருடைய மகளை தீவைத்து எரித்து கொலை செய்கின்றனர்.

இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் தனது அண்ணன் செல்வ ராகவனுடன் சேர்ந்து குற்றவாளிகளை பலி வாங்க முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் படத்தின் கதை

பொன்னி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அதே போல செல்வராகவனும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

கீர்த்திசுரேஷின் நடிப்பும், செல்வகராகவனின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தாலும் அது படத்திற்கு பொருந்துகிறது.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். தேவையற்ற கதாபாத்திரங்களை சேர்க்காமல் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன்.

மொத்தத்தில் சாணிக்காயிதம் – ரசிக்கலாம்

Leave a Reply

You May Also Like