நீர்க்கடுப்பை போக்கும் சலபாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

அஜீரணம், நீர்க்கடுப்பு போன்றவைகளை அணுக விடாது தடுக்கும் ஆற்றல் கொண்டது சலபாசனம். சலபாசனம் நிலை பார்ப்பதற்கு விட்டிலைப் போன்றிருக்கும்.

salabhasana benefits in tamil

சலபாசனம் செய்முறை

சித்திரக் கம்பளத்தில் குப்புறப்படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உடம்பின் இரு பக்கங்களிலும் உடம்பை ஒட்டி நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்து வைத்துக் கொண்டு கால்களை உயரே தூக்கவும்.

மூட்டுக்கள் மடங்காது பார்த்துக் கொள்ள வேண்டும். இந்நிலையே சலபாசனம் நிலை. பின்னர் உயரே தூக்கிய கால்களை கீழே இறக்கி சுவாசத்தை மெதுவாக விடவும். இதே போன்று ஐந்து ஆறுமுறை செய்யவும்.

சலபாசனத்தின் பலன்கள்

  • சோம்பலை அகற்றி சுறுசுறுப்பைத் தரும்.
  • தொந்தியைக் கரைக்கும்.
  • கால் விரல்களையும், கால்களையும் மேம்படுத்தும்.
  • அஜீரணத்தை விலக்கும்.
  • நீர்க்கடுப்பை போக்கும்.
  • இரத்த ஓட்டத்தை விருத்தியடையச் செய்யும்.
  • மூலம் கட்டுப்படும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.