Search
Search

சனியின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்

sani bhagavan pariharam in tamil

சனியால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கிறதோ அதே அளவிற்கு பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஏழரை சனி என்றால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள சிறுசிறு பரிகாரங்களை செய்ய வேண்டும். அது என்னென்ன பரிகாரங்கள் என்பதை இதில் விரிவாகப் பார்ப்போம்.

பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை நன்றாக பொடிசெய்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

பிறகு வன்னி மரத்தடியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று மூன்று முறை சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். இதனை சனிக்கிழமைகளில் செய்துவரவேண்டும்.

சனிபகவானால் ஏற்படும் தொல்லைகள் குறைய அனுமாரை வழிபடவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வழிபட வேண்டும்.

உடல் ஊனமுற்றவர்களுக்கும் விதவை பெண்களுக்கும் உதவி செய்து வரலாம். ஜீவ சமாதி பீடங்கள் சித்தர்களின் பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

எள் கலந்த சாதத்தை தினமும் காகத்திற்கு வைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் கண்டிப்பாக அசைவ உணவு சாப்பிடக்கூடாது.

sani bhagavan pariharam in tamil

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.

விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் 8 சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.

வன்னி மர இலைகளை மாலைகளாக தயார் செய்து சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு சாற்றி வழிபட வேண்டும்

வீட்டில் விளக்கேற்றி விநாயகரை வழிபட்டு பிறகு கருப்பு எள்ளை சனிபகவானுக்கு படைத்து வழிபட வேண்டும்.

சனி பூஜை அன்று ஒரு பிராமணருக்கு இரும்பே தானமாக வழங்குவது மிகவும் நல்லது

சனி பரிகார மந்திரம்

சனி ஸ்தோத்திரம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம்

ரவிபுத்ரம் யமாக்ரஜம்!

ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி சனைச்சரம்!!

தமிழில்

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவின்றிச் சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

காயத்திரி மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்

Leave a Reply

You May Also Like