ஜெட் வேகத்தில் சர்தார் : உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன்

கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே மற்றும் லைலா நடித்த சர்தார் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படம் வெளியான நாள் முதல் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற சர்தார், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் அசத்தியது.
வெள்ளிக்கிழமை – 6 கோடி ரூபாய் வசூலித்த சர்தார், சனிக்கிழமை -7 கோடி , ஞாயிறு – 8 கோடி, திங்கள் – 10.25 கோடி, செவ்வாய் -8.50 கோடி, புதன்கிழமை – 4.75 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.
தற்போது உலகம் முழுவதும் சர்தார் திரைப்படம் 67.92 முதல் 68.92 கோடி வரை வசூலித்திருக்கிறது.