பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் மூத்த நடிகை.. வைரலாகும் மாவீரன் போஸ்டர்!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது தனது கலை பயணத்தின் உச்சியில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. கமல் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல அவருடைய மாவீரன் படத்தின் வெளியீடு தேதியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது, வருகிற ஜூலை மாதம் 14ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யோகி பாபு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுகு ஆகிய இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இறுதியாக தமிழில் சிலோன் என்ற படத்தில் தோன்றிய நிலையில், சுமார் 10 ஆண்டுகள் கழித்து மாவீரன் திரைப்படத்தில் மூத்த நடிகை சரிதா நடித்துள்ளார். நேற்று உலகெங்கிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் மாவீரன் பட குழு சரிதாவும் சிவகார்த்திகேயன் உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தற்பொழுது இந்த பதிவு வைரலாகி வருகிறது.