Search
Search

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சீந்தில் கொடி மூலிகை

seenthil kodi powder benefits in tamil

மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளில் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி. இந்த சீந்தில் கொடி சித்த வைத்தியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மிகுந்த கசப்புச் சுவை உடையது. சீந்திலுக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு.

seenthil kodi powder benefits in tamil

சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து. இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.

சீந்தில் கொடியை பொடி செய்து தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சீந்தில் கொடி, சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் ஒற்றை தலைவலி நீங்கும்.

மூட்டு வலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் சீந்தில் கொடி, தழுதாழை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு பலனளிக்கிறது.

சீந்தில் மூலிகை, உடலின் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் உள்ளது. இதனால் நாள்பட்ட காய்ச்சலில் இருந்து விடுபட உதவுகிறது.

அடிக்கடி ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சீந்தில் மூலிகை தீர்வு அளிக்கிறது.

வயிற்று கோளாறு பிரச்சனைகளை தீர்க்க ஆயுர்வேதத்தில் சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது.

சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.

Leave a Reply

You May Also Like