Search
Search

“இதுதான் சங்கரின் பிரம்மாண்டம்” – இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்..

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன். விடுதலைப் போராட்ட வீரரான சேனாபதி என்பவரின் (கற்பனை) கதையை கூறிய ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம்.

தவறு செய்தது சொந்த மகனாக இருப்பினும், அவரை கொள்ளும் அளவுக்கு துணியும் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்ட வீரரின் கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் கமல் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். இந்நிலையில் சுமார் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

விவேக் அவர்கள் இதுவரை கமலுடன் இணைந்து நடித்ததில்லை என்ற பொழுதும், முதன் முறையாக இந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் அவரும் கலந்து கொண்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்த நிலையில் அவருடைய காட்சிகள் நீக்கப்பட்டு தற்பொழுது திரைப்படம் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த படபிடிப்பின் போதுதான் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகன் இறந்ததும் குறிப்பிடத்தக்கது. பல தடைகளை தாண்டி தற்பொழுது படம் நல்ல முறையில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்காக மதுரையில் வாழ்ந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சுமார் 100 பேரைக் கொண்டு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் வருவது போன்ற சில காட்சிகள் மிக மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த குடும்பம் பல ஆண்டுகளாக ஒன்று கூடி ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருவதாகவும், இதை அறிந்துகொண்ட சங்கர் இவர்களை வைத்து ஒரு காட்சியை மிக பிரமாண்டமாக உருவாக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

You May Also Like