நல்லா தூங்குங்க.. இல்லைனா இந்த பிரச்சனைகள் கண்டிப்பா வரும்..!

மனிதனுக்கு தூக்கம் என்பது மிக முக்கியமானது. இரவில் நன்றாகத் தூங்கினால் தான் மறுநாள் சுறுசுறுப்பாக நம்மால் வேலை பார்க்க முடியும். குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியம்.

சரியான தூக்கம் இல்லாமல் யாரும் சிறப்பாக செயல்பட முடியாது. நமது வேலைப்பாடு, உடல்நிலை, சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து நமது தூக்கத்தின் தன்மை மாறுபடுகிறது.

பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு தூக்கம் கெடுகிறது. இன்னும் சிலர் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது. சரியான அளவு தூங்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

பெண்களைப் பொறுத்தவரையில் தூக்கமின்மை மார்பக புற்றுநோய் உண்டாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் கவனக்குறைவு, ஞாபக மறதி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

குடிப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் சரியாக தூங்கவில்லை என்றால் அவர்களுக்கு இதய நோய்கள் சீக்கிரத்தில் தாக்கும்.

இரவில் நாம் சரியாக தூங்கவில்லை என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் தேவையில்லாத மன குழப்பம், மன அழுத்தம், கோபம் ஆகியவை உருவாகும். இதனால் தினசரி வேலை பாதிக்கப்படும்.

குறைவான நேரம் தூங்கினால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்றால் நன்றாக தூங்குங்கள்.

Recent Post