தேசிங்கு இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் 48வது படம் – கதையின் நாயகி யார்?

கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் படமாக மாறிய திரைப்படம் தான் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
தனது முதல் திரைப்படம் மூலமே ஒரு அசத்தல் இயக்குனராக அறிமுகமானவர்தான் தேசிங்கு பெரியசாமி. அவருடைய இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவரை தொலைபேசியில் அழைத்தும் நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது சிம்புவின் 48வது திரைப்படத்தை உலக நாயகன் கமல் அவர்களுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் இயக்கி வருகிறார் தேசிங்கு. தற்போது இந்த திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், படக்குழு ஹீரோயினை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரபல செய்தி நிறுவனமான விகடன் வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.