பத்து தல.. படம் பார்க்க வந்த நரிக்குறவ பெண்களுக்கு அனுமதி மறுப்பு – GVP போட்ட ட்வீட்

இன்று சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ளது பத்து தல என்ற திரைப்படம், உலக அளவில் பல எதிர்பார்புகளுடன் இந்த திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மிகப்பெரிய அளவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இத்தனை ஆண்டு காலம் தனக்காக காத்திருந்து குரல் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என்றும். இனி அவர்களை மகிழ்விப்பது மட்டுமே தனது கடமை என்றும் அந்த மேடையில் பேசினார் சிலம்பரசன். அடுத்தபடியாக அவர் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்து தேசிங்கு பெரியசாமி இயக்கம் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இன்று பத்து தல படம் வெளியான நிலையில் முதல் ஷோவிற்கு நரிக்குறவ பெணகள் இருவர் டிக்கெட் பெற்றுக்கொண்டு ரோகினி திரையரங்கிற்குள் சென்றுள்ளனர். அப்போது டிக்கெட் கையில் இருந்த நிலையில் அங்கிருந்து திரையரங்க ஊழியர்கள் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது, இது குறித்து பலர் கருத்து வெளியிட்ட நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்.. “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது”, என்று கூறியுள்ளார்.