“கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு வரேன்”.. சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித், சிம்பு மற்றும் தனுஷ் என்று ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு நடிகருக்கு போட்டியாக இன்னொரு நடிகர் களமிறங்குவதுண்டு. இது தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.
இந்நிலையில் எந்தவித போட்டியிலும் இல்லாமல் தனக்கென தனி ரசிகர்களோடு, பல வெற்றி படங்களை கொடுத்து, தொடர்ந்து முன்னேறி வரும் ஒரு நடிகர் தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று அதில் தன் திறமையை நிரூபித்து வெற்றி பெற்றவர் அவர்.
அதன் பிறகு அதே ரியாலிட்டி ஷோக்களுக்கு தொகுப்பாளராக களம் இறங்கி, பின் திரை துறையில் கதாநாயகனின் நண்பனாக நடித்து இறுதியில் கதையின் நாயகனாக மாறி இன்று டாப் ஹீரோக்களின் வரிசையில் பயணித்து வருபவர் தான் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் சுமார் 7.7 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்ட அவர், ட்விட்டர் தளத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இருப்பினும் தனது படம் குறித்த தொடர் அப்டேட்களை தன்னுடைய பட குழுவின் வழியாக அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.